கோலாகலமாக நடந்து முடிந்த ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம். வைரலாகும் ஃபோட்டோஸ்

“கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். தொடர்ந்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.

வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவரான ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், இன்று காலை ஆதிக் மற்றும் ஐஸ்வர்யா ஜோடிக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், நடிகர் விஷாலும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவிற்கு கடந்த 2009-ம் ஆண்டு குணால் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில் சில காரணங்களால் இந்த உறவு விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து ஐஸ்வர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை சில வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.”,

adhik-ravichandran-aishwarya-wedding photos
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

5 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

5 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

5 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

6 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago