Actresses who joined in the shooting of AnnaattheActresses who joined in the shooting of Annaatthe
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப்படத்தில் குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
சூப்பர் ஸ்டாருடன் பல வருடங்களுக்கு பிறகு முன்னணி நடிகைகள் குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடிக்க உள்ளதால் அண்ணாத்த படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த 13 ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த் , நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகை குஷ்பு மற்றும் மீனா படப்பிடிப்பிற்கு இணைந்துள்ளனர்.
நடிகை குஷ்புவும் மீனாவும் விமான நிலையத்தில் சந்தித்து ஒன்றாக பயணித்து உள்ளனர். இவர்கள் சந்தித்த தருணத்தை இருவரும் தங்கள் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…