actress trisha mother about leo movie controversy
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவர் தற்போது தளபதி விஜய் ஜோடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள லியோ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், தாமஸ் மாதீவ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர். மேலும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெற்று வருவதால் படக்குழுவினர் அனைவரும் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். ஆனால் மூன்று நாளில் த்ரிஷா சென்னை திரும்பியதாக புகைப்படங்களும் தகவலும் இணையத்தில் வெளியாக அவர் படத்தில் இருந்து விலகி விட்டார் எனவும் அவரது காட்சிகள் முடிவடைந்து விட்டன. வழக்கமாக லோகேஷ் படத்தில் நாயகி இறந்து விடுவார்கள் அதே போல் இந்த படத்தில் த்ரிஷா இறந்துவிட்டார் போல எனவும் கருத்துக்கள் பரவி வந்தன.
இதுகுறித்து த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் அளித்த பேட்டி ஒன்றில் த்ரிஷா சென்னை திரும்பவில்லை. அவர் தொடர்ந்து காஷ்மீரில் இருந்து படப்பிடிப்பின் கலந்து கொண்டு தான் வருகிறார் என கூறி த்ரிஷாகுறித்து பரவிய தகவல் முற்றிலும் வதந்தி என விளக்கம் அளித்துள்ளார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor