Actress Saranya battles with tumour
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி. இவர் மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசிக்கு மலையாள நடிகர், நடிகைகள் பண உதவி செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மே மாதம் 23-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது என்றும் அவரது தோழியும் மலையாள நடிகையுமான சீமா ஜி.நாயர் தெரிவித்து உள்ளார். சரண்யா சசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'சேயோன்' திரைப்படத்தில், பிரபல கன்னட இயக்குநரும் நடிகருமான ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளதாக படக்குழு…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமிர் கான், தனது காதலியும் தொழில்முனைவோருமான கவுரி ஸ்ப்ராட்டை இன்று மும்பை பாலி ஹில்லில் உள்ள…
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் குடும்பத் திருமண விழாவில், நடிகரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் மகனும்,…
தமிழ் சினிமாவிற்கு மறக்க முடியாத படைப்புகளை வழங்கிய இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் கே. பாக்யராஜ் குறித்து தொடர்ந்து பல சுவாரஸ்ய…
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ஆம்…
Veera Veera Video Song - Angikaaram | KJR | Thenpathiyan | Ghibran | Swastik Visions