actress samantha latest news viral update
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இரண்டு மொழிகளிலும் எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் யசோதா திரைப்படத்தின் பிரமோஷன் போது நடந்த நேர்காணலில் தனக்கு மயோசிட்டிஸ் என்னும் நோயின் பாதிப்பு இருப்பதாக தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சி படுத்தினார். அதன் பிறகு அதற்காக தீவிரமான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த சமந்தா தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாக கூறி மீண்டும் பழையபடி உத்வேகமாக படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்போது குஷி மற்றும் சிட்டாடல் படப்பிடிப்புகளில் கவனம் செலுத்தி வரும் சமந்தா சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகியுள்ளதை உருக்கமாக பதிவின் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை சமந்தா சினிமாவில் நடிப்பதிலிருந்து ஆறு மாதம் அல்லது ஓராண்டு காலம் ஓய்வு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் மயோசிட்டிஸ் நோய் பாதிப்புக்காக வெளிநாட்டில் சிக்கிச்சை பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…