“பெண்கள் பலர் விளையாட்டிற்கு வர வேண்டும்”: ரித்திகா சிங்

சென்னையில், பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் ‘காலணித் திருவிழா 2024’ என்னும் நிகழ்ச்சியை பிரபல நடிகையும் தற்காப்பு கலைஞருமான ரித்திகா சிங் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் மாலில் கூடியிருந்த மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த அவர் அங்குள்ள பல்வேறு கடைகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் பேசினார். அவரது வருகையால் அந்த கடையின் உரிமையாளர்களும், விற்பனையாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த ரித்திகா சிங், \”நான் விளையாட்டை விடமாட்டேன். என் வாழ்க்கையில் சினிமாவிற்கும் விளையாட்டிற்கும் ஒரே அளவு முக்கியத்துவத்தை கொடுப்பேன். பெண்கள் பலர் விளையாட்டிற்கு வரவேண்டும். இது உங்களை உடலளவிலும் மனதளவிலும் வலிமையாக்கும். இதனால் நீங்கள் அதிக வலிமை கொண்டவர்களாக மாறுவீர்கள்\” என்று பேசினார்.மேலும், ரஜினி சார் ஒரு லெஜண்ட் என்று கூறினார். ஞான்வேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் ரித்திகா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.”

actress ritika-singh-speech-goes-viral
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

3 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

3 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

3 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

3 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

3 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

4 days ago