2-வது கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா போலீசில் பரபரப்பு புகார்

பிரபல தமிழ் சினிமா நடிகை ராதா. இவர் முரளி நடித்த சுந்தரா டிராவல்ஸ், சத்யராஜ் நடித்த அடாவடி, கார்த்திக் நடித்த கேம் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். சென்னையில் வசித்து வரும் நடிகை ராதா, கணவரை பிரிந்து மகன் மற்றும் தாயுடன் ஒரே வீட்டில் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜா (40) என்பவருடன் ராதாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாம். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டிலேயே தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இதற்கிடையே வசந்த ராஜா, அடிக்கடி ராதா மீது சந்தேகப்பட்டதாகவும், அவருடன் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக அடித்து கொடுமைபடுத்தியதாக தெரிகிறது. இதில் மனவேதனை அடைந்த நடிகை ராதா, தன்னை அடித்து கொடுமைப்படுத்திய வசந்த ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் நந்தினி இதுபற்றி விசாரணை நடத்தினார். இதில் சப்- இன்ஸ்பெக்டர் வசந்தராஜா, ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி 2 குழந்தைகளுடன் ஆர்.ஏ.புரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருவது தெரியவந்தது. மேலும் வசந்தராஜா திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தபோது நடிகை ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதல் மனைவிக்கு தெரியாமல் ராதாவை 2-வதாக ரகசியமாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் வசந்தராஜா.

நடிகை ராதா ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு தொழில் அதிபர் ஒருவர் மீதும் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

முத்துக்கு வந்த சந்தேகம், விஜயாவுக்கு மீனா கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…

41 minutes ago

அருணாச்சலம் சொன்ன அட்வைஸ், சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

1 hour ago

வினோத் மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

1 hour ago

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

19 hours ago

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ்.??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…

22 hours ago

ஸ்ருதிக்கு வந்த ஐடியா, பிரச்சனையில் சிக்கிய சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…

22 hours ago