Actress Priyanka Chopra shared interesting information about Thalapathy Vijay..!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க விஜய் மறுபக்கம் முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரமும் செய்து வருகிறார். இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தளபதி விஜய் உடன் இணைந்து நடித்தது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது தளபதி விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா இணைந்து தமிழன் என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் பேசிய பிரியங்கா சோப்ரா என்னுடைய முதல் படம் தமிழன் என்றும் என் சக நடிகர் அவரது பெயர் விஜய் மிகவும் பிரபலமானவர் என்றும் கூறியுள்ளார்.
இது மட்டும் இல்லாமல் அவர் நடனம் ஆடுவதை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் அங்கேயே நின்றார்கள் என்றும் அது என்ன ஒரு தெய்வீக உணர்வு என்றும் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…