Actress pooja-hegde-latest-update
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் இப்படம் வந்து போன அடையாளமே தெரியவில்லை. ஆதலால் பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவில் நடிக்க சென்றுவிட்டார். அங்கே சில ஐட்டம் சாங்குகளில் அசத்தலான நடனத்தை ஆடி பிரபலமான பூஜா ஹெக்டே அல்லு அர்ஜுன் உடன் இணைந்து “வைகுண்டபுரம்” என்ற படத்தில் நடித்திருந்தார்.
இப்படம் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் பிரபலமான பூஜா ஹெக்டே தமிழில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான விஜயின் “பீஸ்ட்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பூஜா ஹெக்டேவிற்கு அதிக பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.
இதனால் தெலுங்கு, ஹிந்தி என்று பல படங்களில் கிடைத்த வாய்ப்பின் மூலம் பிசியான நடிகையாக மாறி இருக்கிறார். அதன்பின் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ராதே ஷாம்’ மற்றும் ‘ஆச்சார்யா’ என்ற இரண்டு திரைப்படங்களும் பயங்கரமான தோல்வியை சந்தித்தது. ஆனாலும் மனசோர்வடையாமல் புத்துணர்ச்சியோடு பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டே தற்போது சுற்றுலா செல்ல போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் ஒரு மாதத்தில் மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்களுக்கு செல்ல போவதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் பரவி வருகிறது.
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…