actress nyanthara-latest-update
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார். பெயருக்கு ஏற்றார் போலவே முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.
அதற்குப்பின் திருப்பதியில் சாமி தரிசனம், தாய்லாந்தில் ஹனிமூன் என பிசியாக சுற்றி வந்த நயன்தாரா தற்போது மீண்டும் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது “ஜவான்” படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாராவின் கை கடிகாரம் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது நயன்தாராவுக்கு கைகடிகாரம் என்றால் மிகவும் பிடிக்குமாம் அதற்கென்று தனி பீரோவே வைத்திருக்கிறாராம்.
மேலும் அவர் எங்கு சென்றாலும் விலை உயர்ந்த கை கடிகாரங்களை வாங்கிக் கொள்வாராம். அதிலும் அவருக்கு மிகவும் பிடித்தது Richard Mille கைகடிகாரங்கள்தானாம். மேலும் அவர் விரும்பிய அணியும் ஒரு கைக்கடிகாரத்தின் விலை ரூ 1 கோடியே 20 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து இருக்கின்றனர்.
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…