actress Mehreen Kaur Pirzada call off engagement
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா, தனுஷுடன் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, மார்ச் மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
தற்போது பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறி இருக்கிறார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘நானும் பவ்யா பிஷ்னோவும் திருமணத்திற்கு முன்பே எங்கள் உறவை முறித்துக் கொள்கிறோம். இது எங்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. இனிமேல் பவ்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருடனும் எனக்கு தொடர்பு இல்லை. இது எனது தனிப்பட்ட விஷயம். இதை மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். என் வேலைகளில் இனிமேல் கவனம் செலுத்த இருக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…