Actress Kylia Posey passed away
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப்(GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை கைலியா போஸி. தற்போது 16 வயதான இவர் வாஷிங்டனில் மர்மான முறையில் இறந்துள்ளார். கைலியா போஸி தற்கொலை செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இவரது மரணத்திற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியாகவில்லை.
இந்த செய்தியை அவரது தாயார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர், “என்னிடம் வார்த்தைகளோ எண்ணங்களோ இல்லை. ஒரு அழகான பெண் குழந்தை இறந்துவிட்டது. கைலியாவை இழந்து தவிக்கும் எங்களுக்கு தனியுரிமை கொடுங்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள கைலியா போஸி ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கைலியா போஸிக்கு அவரது ரசிகர்கள் தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…