actress kushboo talk about jananayagan movie issue
ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு குஷ்பு பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. எச். வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.
ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது இதனால் படக்குழு படத்தின் ரிலீஸை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.
இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அவர்களது கருத்து தெரிவித்து வரும் நிலையில் விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குஷ்புவிடம் ஜனநாயகன் பட பிரச்சனைக்கு மத்திய அரசுதான் காரணமா என்ற கேள்வி எழுந்து வருவதாக பத்திரிக்கையாளர்கள் கேட்க அதற்கு குஷ்பூ உடனே இந்த கேள்வியை எதுக்கு என்கிட்ட கொண்டு வரீங்க என்று கேட்டுள்ளார்.
மத்திய அரசை எப்படி குற்றம் சாட்ட முடியும். அப்படி பாத்தீங்கன்னா பராசக்தி ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறாங்க அப்படி மத்திய அரசு தலையிடனும்னா நாங்க திமுகவ தான எதிரியா பார்க்கிறோம். சொல்றவங்க யாரா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு பேசணும் என்று சொல்லி இருக்கிறார்.
இது மட்டும் இல்லாமல் நான் நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் சொல்கிறேன் ஒரு படத்திற்கு சென்சார் வந்த பிறகுதான் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும் தற்போது இருக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் அதை கடைப்பிடிப்பதில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…
Modha Rathri Title Song Video | Rishikanth | Anishma AnilKumar | Raja Karuppasamy | Bharath…
Mudhala Mudiva Video Song | Modha Rathri | Rishikanth | Anishma AnilK | Bharat Sankar…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஜோதிகா, தனது 47 வயதில் முதல்முறையாக ‘புல்-அப்ஸ்’ செய்து அசத்தியுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக…
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொடர்ந்து…
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’…