நடிகை கனகாவா இது? வைரலாகும் ஷாக் போட்டோ

நடிகை குட்டி பத்மினியுடன் சிரித்தபடி அமர்ந்திருப்பவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர். இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் காணம்படும் அவர் வேறு யாருமல்ல நடிகை கனகா தான். சென்னையில் நேற்று முன்தினம் நடிகை குட்டி பத்மினியும் கனகாவும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தித்து கொண்டனர். அந்த மகிழ்ச்சியில் எடுத்துக்கொண்ட படம்தான் இது.

கனகாவின் தாயார் தேவிகா எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கிறார். 1972-ம் ஆண்டு நடிகர் தேவதாஸ் என்பவருடன் திருமணமாகி அவருக்கு 1973-ம் ஆண்டு பிறந்தவர்தான் கனகா. முதலாளி என்ற படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, எம்.ஜி.ஆருடன் ஆனந்த ஜோதி, சிவாஜியின் கர்ணன் படம் உள்பட குலமகள் ராதை, பலே பாண்டியா, ஜெமினியுடன் சுமைதாங்கி என ஏராளமான படங்களில் நடித்து திரையுலகில் புகழின் உச்சியில் இருந்தவர் தேவிகா.

1990-ம் ஆண்டில் கணவர் தேவதாசுடன் விவகாரத்தான பின்பு சென்னையில் மகள் கனகாவுடன் வசித்து வந்தார். 2002-ம் ஆண்டு அவர் மரணமடைந்தார். அவரது மகளான கனகா 1989-ம் ஆண்டில் ராமராஜனுக்கு ஜோடியாக ‘கரகாட்டகாரன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இந்த படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தொடர்ந்து ரஜினி, சரத்குமார் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார். அவர் நடித்த படங்கள் மட்டுமின்றி பாடல்களும் ஹிட் பாடல்களாக அமைந்தது. கனகா தந்தையுடன் பிரச்சினை, காதல் தோல்வி, சொத்து பிரச்சனை என தொடர்ந்து பல பிரச்சினைகளால் தனிமையில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நடிகை குட்டி பத்மினி அவரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்துள்ளார். இருவரும் ஒரு ஹோட்டலில் நீண்ட நேரம் கடந்த கால நிகழ்வுகள் மற்றும் பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசி மகிழ்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது. புகைப்படத்தில் இருப்பது கனகாவா இது? என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Actress kanaga latest photo viral
jothika lakshu

Recent Posts

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

6 hours ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

14 hours ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

15 hours ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

15 hours ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

1 day ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

1 day ago