Actress C.I.D sakunthala passed away
பழம்பெரும் நடிகையான சி.ஐ.டி சகுந்தலா காலமாகியுள்ளார்.
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல படங்களில் நாயகியாக நடித்தவர் பழம்பெரும் நடிகை A.சகுந்தலா. இவர் “சி.ஐ.டி சங்கர்”என்ற முதல் படத்தில் நடித்ததால் சி.ஐ.டி சகுந்தலா என்று குறிப்பிடப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து படிக்காத மேதை, கை கொடுக்கும் தெய்வம், திருடன், வசந்த மாளிகை, ராஜராஜ சோழன், எங்கள் தங்க ராஜா, வைர நெஞ்சம், அவன் ஒரு சரித்திரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
எம்ஜிஆர் உடன் என் அண்ணன் மற்றும் இதயவீணை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திய இவர் சில சீரியல்களிலும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக இவர் மரணம் அடைந்துள்ளார். இவரின் மறைவிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…