actress ambika in ellam nanmaike new movie update
சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ” ஒன்வே” என்ற திரைப்படத்தில் நடித்த தமிழ்பாண்டியன் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.மற்றொரு கதாநாயகனாக நடிக்க இளம்நடிகர் தேர்வு நடக்கிறது
கதை, திரைக்கதை, வசனம் எழுதி தமது முதல்படமாக இயக்கும் ராஜா பரணிதரபிரபு படத்தைப் பற்றி கூறியதாவது, :- ” எல்லாம் நன்மைக்கே படத்தில் காதல், திரில்லர், காமெடி, குடும்பம், பாசம் உள்ளடக்கிய படமாக படமாக்குகிறேன். மக்களுக்கு பிடித்த கதை இது என்று அம்பிகா மேடம் பாராட்டியது எனக்கு விருதாக கருதுகிறேன். தம்பிராமையா, அனுமோகன் , கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கிறார்கள். அம்பிகாவின் மகளாகவும் கதாநாயகியாகவும் நடிக்க அம்பிகாவின் முகத்தோற்றத்தில் இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய உள்ளோம். இன்றைய வாழ்வியல் சூழ்நிலையில் அனைவருக்கும் தேவைகள் அதிகரித்து விட்டது. அப்படி தேவைப்படும் ஒன்றை வைத்து காமெடி, காதல், திரில்லர் கலந்து திரைக்கதை அமைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறேன். ” என்று இயக்குனர் ராஜாபரணிதரபிரபு கூறினார்.
படப்பிடிப்பு கேரளாவில் உள்ள கொழிஞ்சாம் பாறையில் துவங்கி பொள்ளாச்சி, வால்பாறையில் வளர்ந்து சென்னையில் முடிவடைகிறது.
ஜான் பாபு நடன பயிற்சியையும், முருகானந்தம் ஒளிப்பதிவையும், யானி. ஆர். இசையையும் கவனிக்கின்றனர்.
ஜி குரூப் புரொடக்சன் சார்பில் தனசேகரன் – கோழிக்கடை கோபால் சேர்ந்து தயாரிக்கின்றனர்.
முன்னணி இயக்குனர்கள் பலரிடம் டைரக்சன் பயின்ற ராஜா பரணிதரபிரபு இதன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி தமது முதல் படமாக இயக்குகிறார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…