Actress Alia Bhatt New Movie Song Update
பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் ‘ஏ தில் கே முஸ்கில்’ படத்தை தொடர்ந்து ஆலியா பாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
மூன்று பாகங்களில் உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து தற்போது இப்படத்தின் தமிழ் பதிப்பில் இடம் பெற்றுள்ள “தீத்திரியாய் மூலமா” என்ற பாடலை ஆலியா பட் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் இப்பாடலை குறித்து ஆலியா பட் தமிழில் “எங்க காதலோட ஓசை இப்போ உங்களுக்கு கேட்கும் தீத்திரியாய் மூலமா! என்று பதிவிட்டுள்ளார். சித்ஸ்ரீராம் குரலில் வெளியாகியுள்ள இந்த படத்தின் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…