கள்ள குறிச்சியில் தொடரும் உயிரிழப்புகள், தமிழக அரசுக்கு விஷால் வைத்த கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்ததால் உயிரிழப்புகள் அதிகமாகிக் கொண்டே வருவதால் நடிகர் விஷால் தமிழ்நாடு அரசிற்கு அறிக்கை வாயிலாக கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும் போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.

சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Actor Vishal’s request to Tamil Nadu Govt

“கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.”

என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன்.

உங்களில் ஒருவன் விஷால்
நடிகர் / தயாரிப்பாளர்

நடிகர் விஷால் வெளியிட்ட இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Thadai Athai Udai Audio Launch

https://youtu.be/lewVy1-jb6E?t=2

9 hours ago

Kasivu Movie Press Meet | MS.Bhaskar | Kayal Patti Vijayalakshmi

https://youtu.be/SPNqvVR15cQ?t=1

9 hours ago

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…

9 hours ago

பிரபல இயக்குனரை மும்பையில் சந்தித்த சிவகார்த்திகேயன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…

9 hours ago

சொந்த குரலில் பாட்டு பாடி அசத்திய காமெடி நடிகர் யோகி பாபு.!!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…

10 hours ago