actor-vishal-lathi-movie-details
தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவாக வலம் வருபவர் தான் விஷால். இவர் தற்போது “லத்தி” என்னும் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் வினோத்குமார் இயக்கி வரும் இப்படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பிரபு அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து வருகின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இப்படம் விஷால் நடிப்பில் வெளியாகும் முதல் பான் இந்தியா படம் என்பதால் இப்படத்தின் இறுதி கட்ட பணியில் விஷால் தீவிரமாக நடித்து முடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்கான டீசரின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதாவது ‘லத்தி’ படத்தின் ‘டீசர்’ வரும் ஜூலை 24ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை சிறிய வீடியோ பதிவின் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…