Actor vishal-in-andhra-pradesh-assembly-elections
ஆந்திராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தற்போதையை முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதியில் 151 தொகுதிகளை கைப்பற்றி ராட்சச பலத்துடன் ஆட்ச்சியை கைப்பற்றியது, இவரை எதிர்த்து நின்ற சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்த்துக்கூட கிடைக்காத நிலைமைக்கு தள்ளப்பட்டது, நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெறும் 1 தொகுதியை மட்டும் கைப்பற்றியது பவன் கல்யாணும் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.
ஜெகன் மோகனின் வியூகம்..
கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சி ஆந்திர மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி இம்முறையும் தனித்து களம் காண உள்ளார், கடந்த முறையை விட இம்முறை அதிக தொகுதிகளை வென்றுவிட வேண்டும் என்றும் முனைப்பு காட்டி வரும் சூழ்நிலையில் அதிலும் குறிப்பாக தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு எம்.எல்.ஏவாக இருக்கும் குப்பம் தொகுதியில் வலுவான வேட்பாளரை நிற்க வைக்க வேண்டும் என்று எண்ணிய ஜெகன் மோகன் ரெட்டி அதற்காக நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆந்திராவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
ஏன் நடிகர் விஷாலை தேர்வு செய்கிறார் ஜெகன் மோகன் ?
சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, இப்பகுதி கர்நாடக மற்றும் தமிழகத்தின் எல்லை பகுதி, கர்நாடகாவின் கே.ஜி.எஃப் லிருந்து வெறும் 22 கிலோமீட்டர் மட்டுமே அதே போல் சித்தூரிலிருந்து தமிழக எல்லையான காட்பாடி வெறும் 30 கிலோமீட்டர் மட்டுமே ஆகும்.
குப்பம் தொகுதி உட்பட சித்தூர் மாவட்டத்தில் பெரும் அளவில் தமிழகத்திலிருந்து வேலைக்கு சென்று குடியேறியவர்வர்களே தற்போது அங்கு பெரும் வாக்காளர்களாக உள்ளனர், இதனால் தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமான அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான ஒருவரை தேர்வு செய்ய ஆலோசித்த பொது சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ வும் மாநில அமைச்சருமான பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைத்த பெயர் நடிகர் விஷால்.
நடிகர் விஷாலை அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி பரிந்துரைக்க காரணம் என்ன ?
ஏற்கனவே மேற்கூறிய காரணமான தமிழ் மக்களுக்கும் ஆந்திர மக்களுக்கும் நன்கு அறிமுகமான நபர் நடிகர் விஷால், அது மட்டுமின்றி நடிகர் விஷால் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பாக அவரது தந்தை ஜி.கே.ரெட்டியின் கிரானைட் குவாரியில் வேலை செய்து வந்தார் நடிகர் விஷாலின் தந்தை அதிகமானா கிரானைட் குவாரி நடத்திவந்தது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் அதிலும் குறிப்பாக குப்பம் தொகுதியை மையப்படுத்தியே இருந்தது, பல ஆண்டுகாலம் விஷால் அங்கே தங்கி வேலைப்பார்த்த காரணத்தால் அத்தொகுதி முழுவதும் விஷாலிற்கு தெரிந்த இடங்கள் என்பதாலும் தான் அமைச்சர் பெட்டிரெட்டி ராமச்சந்திர ரெட்டி விஷாலை பரிந்துரைத்தாக கூறப்படுகிறது இதற்கிடையே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தரப்பிலிருந்து விஷாலிடம் பேசியதாகவும் விஷாலின் பதிலிற்காக காத்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…
Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…
God Mode Lyric Video | Karuppu | Suriya | RJB | Trisha | SaiAbhyankkar |…
Pagal Kanavu Official Teaser | Faisal Raj | Krishnanthu | Athira Santhosh | Shakeela |…
Aaryan Trailer Tamil | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…