ஜெயிலர் பட நடிகர் மீது வழக்குப்பதிவு..யார்? என்ன காரணம் தெரியுமா?

“ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் \”ஜெயிலர்\”. இயக்குனர் நெல்சன் இயக்கிய ஜெயிலர் படம் கிட்டத்தட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் விநாயகன். இந்த நிலையில், வில்லன் நடிகர் விநாயகனை கேரள மாநில போலீசார் கைது செய்துள்ளனர். எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர மதுபோதையில் காவல்துறை அதிகாரியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

காவல் அதிகாரி தாக்கப்பட்டதால், காவல் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு, விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். குடும்ப பிரச்சினை காரணமாக நடிகர் விநாயகன் காவல் நிலைய உதவியை நாடினார் என்று காவல் துறை ஆய்வாளர் பிரதாப் சந்திரன் தெரிவித்து உள்ளார். நடிகர் விநாயகன் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.”,

actor-vinayakan-arrested update
jothika lakshu

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

20 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

20 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

20 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

20 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

21 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

1 day ago