actor-vikram-tweet viral
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கலான் சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. மேலும், நடிகர் விக்ரம் கேஜிஎஃபில் வாழும் தமிழர்களை சந்தித்த புகைப்படமும் வைரலானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் விக்ரம் ‘தங்கலான்’ கெட்டப்பில் இருக்கும் புதிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
தங்கலான் இந்நிலையில் நடிகர் விக்ரம் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ‘உதிக்கும் போதும் மறையும் போதும் ரசிக்கும் உலகம்.. உச்சிக்கு வந்தால் திட்டித் தீர்க்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.
கருப்பு திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது ரோகினி பற்றி…
ஸ்டைலிஷ் ட்ரெஸ்ஸில் ஹீரோயின் போல் மாறியுள்ளார் ஷிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி. அதனைத்…
இட்லி கடை படத்தின் 4 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…