தனது வெற்றிக்கான ரகசியம் இதுதான் காரணம்.? உண்மையை உடைத்த விஜய் சேதுபதி

ரசிகர்களால் செல்லமாக மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முதல் முதலில் முன்னணி நடிகர்களோடு துணை வேடத்தில் தான் நடிக்க ஆரம்பித்தார். அதில் சுந்தரபாண்டியன் என்ற சசிகுமார் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கும் விஜய் சேதுபதி இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சேதுபதி, தர்மதுரை போன்ற படங்களில் தனது யதார்த்தமான நடிப்பினை கொடுத்த விஜய் சேதுபதி ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தின் மூலம் முன்னணி நடிகராக வலம் வர ஆரம்பித்தார். இவர் ஹீரோவாக நடிப்பது மட்டுமின்றி தனக்கு பிடித்த கதாபாத்திரங்களான சிறு கதாபாத்திரங்கள் மற்றும் வில்லன் போன்ற அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். தற்போது இவர் நடித்த விக்ரம் திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கண்ட விஜய் சேதுபதி தற்போது பல படங்களில் ஹீரோ மற்றும் வில்லனாக பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் தனது வாழ்க்கைக்கான சக்சஸ் குறித்த விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் “எப்பொழுது ஒருவர் நான் இந்த விஷயத்தை கற்றுக் கொண்டு விட்டேன், எனக்கு இது தெரியும் என்று கூறுகிறார்களோ, அவர்கள் வாழ்வில் வீழ்ச்சி அடைய தொடங்கிவிட்டனர் என்று அர்த்தம்”, நாம் அந்த வார்த்தைகளை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது.

ஏனெனில் நாம் வாழும் வாழ்க்கையில் தினமும் மற்றவர்களிடம் இருந்து புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கின்றோம் வாழ்வில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளது தனக்கு எல்லாம் தெரியும் என்று பேசுவது ஓவர் கான்ஃபிடன்ட்டை ஏற்படுத்திவிடும் அதன் மூலம் நாம் சீக்கிரம் விழுந்து விடுவோம். அதனால் அவற்றை தவிர்த்து புது விஷயங்களை கற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று தனது சக்சஸ் சீக்ரெட்டை பகிர்ந்து உள்ளார். இவர் கூறியுள்ள இந்த விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி அனைவரிடமும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது.

actor vijaysethupathi shared about success secret
jothika lakshu

Recent Posts

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…

7 hours ago

“சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்” – நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன?

"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…

7 hours ago

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…

7 hours ago

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’

இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…

7 hours ago

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்..

முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…

7 hours ago

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி சொன்ன தகவல்..!

தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…

24 hours ago