நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்.. இடைக்கால தடை நீட்டிப்பு..

நடிகர் விஜய், கடந்த 2016-17-ம் நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்த போது அதில், அந்த ஆண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிபிட்டுள்ளார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.

இதையடுத்து, இந்த வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019-ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இடைக்காலத் தடையை அக்டோபர் 26 வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Suresh

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

1 day ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

1 day ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

1 day ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

1 day ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

1 day ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

2 days ago