Actor Sonu Sood to contest for Mumbai mayor post
தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் சோனுசூட், கொரோனா காலத்தில் நடை பயணமாக சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகன வசதிகள் செய்து கொடுத்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானம் அனுப்பி அழைத்து வந்தார். 3 லட்சம் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி, இன்சூரன்ஸ் வசதியோடு வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து கொடுத்தார். அவரது சமூக சேவை பணிகளில் ஈர்க்கப்பட்ட ஒரு மாநில அரசு சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி, சீட் வழங்க முன்வந்ததாகவும், அதை ஏற்க சோனுசூட் மறுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சோனுசூட்டை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு நிறுத்த மாராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது. சோனுசூட்டை மேயர் பதவி வேட்பாளராக களம் இறக்கும்படி கட்சியின் மாநில செயலாளர் கணேஷ்குமார் யாதவ் காங்கிரஸ் கட்சி மேலிடத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…