actor simbu is going to act villan in thalapathy 67
கோலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் பத்து தல திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் சிம்பு விஜய்க்கு வில்லனாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதாவது தளபதி விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
இப்படம் தொடர்பான அப்டேட் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அண்மையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இதனால் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தில் விஜய்க்கு மெயின் வில்லனாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் என்பதால் தான் அந்த நாளில் அப்டேட் வெளியாகும் என்று இயக்குனர் லோகேஷ் தெரிவித்திருப்பதாகவும் தகவல் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…