Actor Simbu Decison on Upcoming Movies
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் தற்போது ஹீரோவாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக நடிகர் சிம்பு தன்னுடைய உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில் பத்து தல படத்தில் கேங்ஸ்டர் வேடத்தில் நடிப்பதால் மீண்டும் தன்னுடைய உடல் எடையை கூட்டும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் சிம்பு. அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் உடல் எடையை கூட்டி நடித்த பிறகு குரானா குமார் படத்துக்காக மீண்டும் உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.
இப்படி படத்துக்கு படம் உடல் எடையை கூட்டி குறைப்பது என்பது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என தெரியவில்லை என்பதால் ரசிகர்கள் பயத்தில் உள்ளனர். சிம்பு தற்போது ஸ்லிம்மாக இருப்பது போலவே எப்போதும் இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor