actor shah rukh khan retweeted vignesh shivan post viral
இந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். பாலிவுட்டின் டாப் ஹீரோவான இவர் தற்போது தமிழில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி விஜய் படங்களை இயக்கி பிரபல இயக்குனரான அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ஷாருக்கானுக்கு ஜோடிகளாக நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனே நடித்திருக்கின்றனர். மேலும் இப்படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க யோகி பாபு, பிரியாமணி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டது. இந்த வீடியோ அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் முன்னோட்ட வீடியோவை பாராட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் “பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்திலேயே சிறப்பாக பணியாற்றி இருக்கும் இயக்குனர் அட்லியை நினைத்து பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. முன்னோட்ட வீடியோ சர்வதேச தரத்தில் உள்ளது. அட்லியின் பொறுமையும் கடின உழைப்பும் நன்றாக தெரிகிறது. எனது சார்பாக மிகுந்த பாராட்டும் அரவணைப்பும். நயன்தாராவின் பாலிவுட் அறிமுகமே ஷாருக்கானுடன் இருப்பது கனவு நினைவான மாதிரி உள்ளது. அனிருத் மற்றும் விஜய் சேதுபதிக்கு எனது பாராட்டுக்கள்” என்று பதிவிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
அதற்கு நடிகர் ஷாருக்கான், விக்னேஷ் சிவன் உங்களின் அன்புக்கு நன்றி. நயன்தாரா அருமையானவர்… ஆனால் இதை நான் யாரிடம் சொல்கிறேன்… உங்களுக்கு முன்பே தெரியும்!! ஆனால், அவர் இப்போது நன்றாக அடிக்கவும் உதைக்கவும் கற்றுக் கொண்டுள்ளார். ஜாக்கிரதையாக இருங்கள்!! என்று கிண்டல் அடித்து பதில் அளித்திருக்கிறார். இவர்களது இந்த ஜாலியான பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…
வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…
நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
மாப்ள சம்பா அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…