Parthiepan becomes the first Tamil actor to receive Golden
ஐக்கிய அரபு அமீரகம் பல முன்னணி இந்திய நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகிறது. ஷாருக் கான், அக்ஷய் குமார், போனி கபூர் குடும்பம், மம்மூட்டி, மோகன்லால், பாடகி சித்ரா, துல்கர் சல்மான் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது தமிழ் நடிகர்களில் முதல் ஆளாக பார்த்திபனுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டு இருக்கிறது. தனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டு இருக்கும் விஷயத்தை பார்த்திபன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
“Golden visa -இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த JUMA ALMHEIRI GROUP OF COMPANY-MOHAMMED SHANID (CEO)& இதர நண்பர்கள் சொன்னார்கள். VISAரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது” என அவர் பதிவிட்டு உள்ளார்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…