Actor Nandha About Ajith in KKKK Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக ajith 61 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நேற்று அஜித்தின் பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்தனர்.
இந்த நிலையில் நடிகர் நந்தா அஜித் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு வந்த நிலையில் அது குறித்து கேட்க அஜித் பற்றி பேசியுள்ளார்.
அஜித் வாலி படத்திற்குப் பிறகுதான் பிரபலமான நடிகர் ஆனார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் போது அவர் அவ்வளவு பிரபலம் இல்லை. ஐஸ்வர்யாராய், மம்முட்டி என எல்லோரும் ஒன்றாக இருப்பார்கள். ஆனால் அஜித் மட்டும் எப்போதும் தனியாகத்தான் இருப்பார். சாப்பிடும் போது எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள் ஆனால் அஜித் சார் மட்டும் தன்னுடைய மேக்கப்மேன் உடன் வெளியில் தரையில் அமர்ந்து சாப்பிடுவார்.
அவர் இப்போதும் அப்படியே இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என அஜித் பற்றி பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…