actor nagarjuna speak about maniratnam movie
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை அவர் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்தனர்.
மொத்தம் ஐந்து மொழிகளில் மிக பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டையாடி வருகிறது. இரண்டே நாளில் 150 கோடி வசூல் செய்த நிலையில் ஆறு நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் சேர்த்து 350 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இப்படம் தமிழரின் பெருமையாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் இப்படத்தை பலரும் புகழ்ந்து தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா அவர்கள் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் மணிரத்தினம் இப்படத்தை அழகான முறையில் இயக்கியுள்ளார். அவரால் மட்டுமே இது போன்ற அற்புதங்கள் சாத்தியம் என்று புகழ்ந்துள்ளார், அதனை தொடர்ந்து இப்படத்தை இயக்குவது மணியின் பல வருட கனவு என்றும், இப்படம் குறித்து அவர் தன்னிடம் பலமுறை பேசி உள்ளதாகவும் நாகார்ஜுனா கூறியுள்ளார். மேலும் கீதாஞ்சலி படத்தில் மணிரத்தினத்துடன பணியாற்றிய அனுபவத்தை மறக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…