Actor Mukesh divorce his 2nd wife at the age of 64
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் முகேஷ். மலையாள திரையுலகில் 250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழிலும் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதி மல்லி, ஐந்தாம் படை, பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு நடிகை சரிதாவை திருமணம் செய்த இவர், 2011-ல் விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் 2013-ம் ஆண்டு பரத நாட்டிய கலைஞர் தேவிகாவை 2-வது திருமணம் செய்து கொண்டார் முகேஷ்.
இந்நிலையில், முகேஷ் மற்றும் தேவிகா குடும்ப வாழ்க்கையில் தற்போது முறிவு ஏற்பட்டு உள்ளது. விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்து இருவரும் குடும்ப நலக்கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இதுகுறித்து தேவிகா கூறும்போது, “முகேஷ் நல்ல கணவர் இல்லை. 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்துகொள்ள முடியாது. எனவேதான் பிரிய முடிவு செய்தேன். எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு’’ என்று கூறியுள்ளார்.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…