Actor Mansoor Ali Khan petitions for pre-bail
கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், அவர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டதாகவும், உள்நோக்கத்தோடு வேண்டும் என்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை எனவும், எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…
ஓணம் ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் மாளவிகா மோகனன். தமிழ் சினிமாவில் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான…
கூலி படத்தின் மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர்…
மதராசி படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில்…
கார் டிக்கியில் கிரிஷ் இருப்பதை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ…