தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.
இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் கவின் தனது படத்தில் அனிருத் இசையமைத்தது குறித்து சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “அனிருத் சார் என்படத்தில் பாட வேண்டும் என்பது என கனவு, ஆனால் அவர் என் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது நன் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. இது என் வாழ்நாள் ஆசை முழுவதும் நிறைவேறியது போல் இருக்கிறது. என் வாழ்க்கை பயணத்தில் என் உடன் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. வருகை தந்த செண்பகமூர்த்தி சார் மற்றும் மிஷ்கின் சாருக்கு சிறப்பு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…