actor karthik raj about mirchi senthil
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார் கார்த்திக் ராஜ். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி அதன் பிறகு செம்பருத்தி என்ற சீரியல் மூலமாக மொத்த தமிழ் மக்களின் நெஞ்சங்களையும் கவர்ந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது இவர் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் ஆரம்பம் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஜீ தமிழின் நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது. இப்படியான நிலையில் இந்த வருடத்திற்கான ஜீ தமிழ் குடும்ப விருதுகள் விழா வரும் தீபாவளிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இதற்கான நாமினேஷன் தொடங்கி மக்கள் மத்தியில் இருந்து தொடர்ந்து ஓட்டுகள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியான முன்னோட்டம் வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.
அப்படியோரு ப்ரோமோ வீடியோவில் அண்ணா சீரியலில் நாயகனாக நடித்து வரும் செந்தில் மக்கள் பேவரைட் தான் என்னுடைய பேவரைட் என கார்த்திக் ராஜை புகழ பதிலுக்கு கார்த்திக் ராஜ் இந்த வருஷம் போட்டி டப்பா இருக்கும்னு நினைக்கிறன், ஏன்னா செந்தில் அண்ணா மாதிரி எல்லாம் என்னால நடிக்க முடியாது. அவர் பயங்கர டெடிகேட்டிவ் என கூறியுள்ளார்.
இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் நீங்க ரெண்டு பேருமே எங்களுடைய பேவரைட் தான் கமெண்டுகளில் வாழ்த்துக்களை வாரி வழங்கி வருகின்றனர். ஸ்மார்ட்டான நடிப்பிற்கு கார்த்திக் மாஸான நடிப்பிற்கு செந்தில் என கூறி வருகின்றனர். இவர்களை பத்தி நீங்க என்ன சொல்றீங்க? உங்க பேவரைட் யாரு?
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…