actor kamalhassan emotional post about actor viswanath
தமிழ் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக பதிவுகளை பகிர்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் தற்போது உருக்கமான பதிவை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது, இந்திய சினிமாவில் நடிகரும் இயக்குனருமாக பன்முகத் திறமைகள் கொண்ட கே.விஸ்வநாத் அவர்கள் நேற்றைய தினம் உடல்நல குறைபாடு மற்றும் வயது முதிர்வு காரணமாக மரணமடைந்துள்ளார்.
பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர் கமலின் சலங்கை ஒலி ,சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இவரது மரணம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “வாழ்க்கையின் இடைநிலை, கலையின் அழியாத்தன்மை முழுமையாக புரிந்து கொண்டவர் விஸ்வநாத். காலம் கடந்து இவரது கலை பங்களிப்பு கொண்டாடப்படும். என்று எழுதியுள்ள புகைப்படத்தை பதிவிட்டு சல்யூட் மாஸ்டர் என்றும் குறிப்பிட்டு தன்னுடைய இரங்கலை உருக்கத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…