Actor kamalhaasan-join-with-maniratnam
உலக சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். உலகநாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து அறிவிப்பு நேற்று மாலை வெளியாக இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு சொல்லப்பட்டது போல அறிவிப்பு வெளியானது. ஆனால் படத்தின் இயக்குனர் வினோத் இல்லை என தெரிய வந்தது. கமலின் அடுத்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ரெட் ஜெயன்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க இந்த படத்திற்கு ரகுமான் இசையமைக்கிறார்.
35 வருடங்களுக்கு முன்னர் இவர்களது கூட்டணியில் நாயகன் திரைப்படம் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த மேஜிக் கூட்டணி அமைந்திருப்பது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.
பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…