actor dhanush movie latest update
தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தீவிரமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இதற்கிடையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பு தனுஷ் இயக்கி நடிக்க இருக்கும் “டி 50” திரைப்படம் குறித்த அப்டேட்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சுதீப் கிஷன் , விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து கதாநாயகி குறித்த தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில், சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை அபர்ணா பாலமுரளி இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் இப்படத்தில் சுதீப் கிஷனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூலை மாதத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…