actor-bablu-second-marriage-news-video
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் பப்லு என்கின்ற பிரித்விராஜ். தமிழ் ,தெலுங்கு மொழிகளில் பல வெற்றி படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற தொடரில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் ஆட்டிசம் பாதித்த தனது 25 வயதான மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் 57 வயதை நிரம்பி இருக்கும் பப்லு மலேசியாவை சேர்ந்த 23 வயதான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
தற்போது இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் பப்லுவின் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர், “நான் மலேசியா பெண்ணை கல்யாணம் பண்ணிட்டேன்னு வைரலாச்சு, ஆமாம் நான் பண்ண போறேன் ஆனா இப்போ இல்ல உங்க கிட்ட சொல்லிட்டு தான் பண்ணுவேன், திருட்டுத்தனமாக எதுவும் செய்ய மாட்டேன்” என்று அதிரடியான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.
Vaane Vaane Lyrical Video | Sri Sri (Tamil) | Dulquer Salmaan | Pooja Hegde |…
Kalangathey Lyrical Video | Magudam (Tamil) | Vishal | Anjali | Dushara | GV Prakash
She is My Chellakutty Lyric Video | Immortal | GV Prakash, Kayadu Lohar | Sam…
விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் பிரபல தொடர் ‘சின்ன மருமகள்’. இதில் தாமரைச்செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் நடிகை வனிதா விஜயகுமார் உற்சாகமாக ஷாப்பிங் செய்துள்ளார்.…
வெற்றிகரமான தொழிலதிபராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் யுவா புஷ்பாகர், சினிமா மீதான தனது தீராத காதலால் மீண்டும் திரையுலகில்…