actor ajith gifted to famous big boss constant
கோலிவுட்டில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித் குமார். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, சிபி ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
இப்படத்தில் இருந்து வெளியான எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் மற்றும் இரண்டு சிங்கள் பாடல்கள் அண்மையில் வெளியாகி தல ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படத்தில் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகர் சிபி புவனா சந்திரனுக்கு துணிவு படப்பிடிப்பின் போது தல அஜித் கூலிங்கிளாஸ் ஒன்றை பரிசாக தந்துள்ளார்.
அதன் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த சிபி அதில் “அஜித் சார் கொடுத்த இந்த விலைமதிப்பற்ற பரிசை, பொக்கிஷமாக வைத்திருப்பேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…