இனி காத்திருக்க முடியாது…. ‘அண்ணாத்த’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு

ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா பரவலுக்கு முன்பே தொடங்கியது. ஐதராபாத்தில் பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டனர். கடந்த அக்டோபர் மாதம் ஊரடங்கை தளர்த்தியதும் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க திட்டமிட்டனர். நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புக்கு செல்ல தயாரானார்கள்.

ஆனால் தெலுங்கு, இந்தி படப்பிடிப்புகளில் பங்கேற்றவர்கள் கொரோனா தொற்றில் சிக்கியதால் ரஜினிகாந்த் பாதுகாப்பை கருத்தில் கொண்டு படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பை இனிமேலும் தள்ளி வைக்க வேண்டாம் என்று படக்குழுவினர் முடிவு செய்து மீண்டும் படப்பிடிப்புக்கான பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர். இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. அடுத்த மாதம் 2-வது வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர் நடிகைகளும் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

ரஜினிக்கு அதிகமாக கொரோனா முன் எச்சரிக்கை பாதுகாப்பு அளிக்க உள்ளனர். ஒரு மாதத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்து விட திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு வரும் என்று தெரிகிறது. இதில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

Suresh

Recent Posts

லைஃப்ல நம்மளுக்கும் ஒரு பாயிண்ட் வரும்.. அப்போ உலகமே நம்மளை வேடிக்கை பார்க்கும்.. மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ்..!

மாணவர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் அட்வைஸ் கொடுத்துள்ளார். கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அதனைத் தொடர்ந்து லவ்…

2 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட அருணாச்சலம்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

தனுஷ் 56 படத்தின் கதைகளும் குறித்து தகவலை பகிர்ந்த மாரி செல்வராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

5 hours ago

எங்க அப்பாவை பார்த்து இதுதான் சக்சஸா என்று கேட்டேன்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு.!!

வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

6 hours ago

கிருஷுக்கு வந்த காய்ச்சல்.. ரோகினிக்கு உதவிய சிந்தாமணி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

முத்து எடுத்த முடிவால்மீனா பயத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த…

9 hours ago

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

1 day ago