abbas-admitted-to-hospital,actor-abbas
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கொல்கத்தாவில் பிறந்து, மும்பையில் படித்து, பெங்களூரில் நடிக்கத் தொடங்கிய இவர் காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே, கண்ணெழுதி தொட்டும் பொட்டு, படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் அப்பாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், மருத்துவமனையில் நாம் இருக்கும்போது கவலைகள் மோசமானவையாக இருக்கும். நான் சில பயங்களை சமாளிக்க முயற்சித்து வருகிறேன். அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும். தனக்காக பிரார்த்தனை செய்து அனைவருக்கும் நன்றி என அப்பதிவில் புகைப்படத்துடன் இணைத்து தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் இவரது இந்த புகைப்படத்தை பார்த்து வருத்தம் அடைந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதலான கமெண்ட்களை செய்து வருகின்றனர்.
கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…
வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…
இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…