Aamir Khan withdraws from remake
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தயாரிப்பாளர் சஷிகாந்த் தயாரிக்க இருந்தார். புஷ்கர் – காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள்.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷாரூக் கான் நடிப்பதாக இருந்தது. ஆனால், முழு திருப்தி இல்லை என விலகிவிட்டதாகக் கூறப்பட்டது. அவரைத் தொடர்ந்து விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அமீர் கான், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் ஆகியோர் நடிப்பது உறுதியானது.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் பல்வேறு படத்தின் பணிகள் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டது. இதனால் முன்பே ஒப்புக் கொண்ட பணிகள் அனைத்துமே மாறியிருப்பதால் ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து அமீர் கான் விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
Scene Official Trailer | Suriya | Nazriya Nazim | Naslen | Sushin Shyam | Jithu…
தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அசின். மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. அந்த வகையில், சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில்…
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டுவம்’. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஆர்யா, சபீர்,…
தேசிய விருது பெற்ற இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘#PocketNovel’ (பாக்கெட் நாவல்). ‘ஆரண்ய காண்டம்’,…
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையே விரைவில் கதாநாயகனாகவும் களமிறங்க…