படக்குழுவினரிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்

டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி உலக அளவில் வரவேற்பை பெற்ற ‘பாரஸ்ட் கம்ப்’ ஹாலிவுட் படம் இந்தியில் அமீர்கான் நடிக்க லால் சிங் சட்டா என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. ஏற்கனவே யாஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகி உள்ள கே.ஜி.எப்.-2 படம் வருகிற ஏப்ரல் மாதம் 14-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது அதே தேதியில் அமீர்கானின் லால் சிங் சட்டா படமும் வெளியாகும் என்று தெரிவித்து உள்ளனர்.

இதனால் கே.ஜி.எப். படக்குழுவினர் வட இந்தியாவில் தங்கள் படத்துக்கு குறைவான தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து கே.ஜி.எப்.-2 படக்குழுவினரிடம் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘லால்சிங் சட்டா படத்தை கே.ஜி.எப்.-2 வெளியாகும் நாளில் ரிலீஸ் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து கே.ஜி.எப்.-2 படத்தின் கதாநாயகன் யாஷ் உள்ளிட்ட படக்குழுவினருக்கு கடிதம் எழுதி மன்னிப்பு கேட்டேன். அவர்களும் எனது நிலையை புரிந்து கொண்டனர். கே.ஜி.எப். அதிரடி சண்டை படம், எனது படம் காதல் கதையிலான குடும்ப படம். எனவே இரண்டையும் மக்கள் பார்ப்பார்கள். வசூல் பாதிக்காது” என்றார்.

Suresh

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

21 hours ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

21 hours ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

21 hours ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

22 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

22 hours ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

22 hours ago