aadhi bharathi kalyana vaibhagam update
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் கதைக்களம் ஆதி, பாரதி கல்யாணத்தை நெருங்கி வருகிறது.
ஒரு பக்கம் ஆதிக்கும் பாரதிக்கும் கல்யாண ஏற்பாடுகள் நடக்க ஸ்வேதா ஆதி தன்னுடைய கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று அதற்கான சூழ்ச்சி வேலைகளை தொடங்கி உள்ளார். இன்னொரு பக்கம் சொத்துக்காக ஆதியை போட்டு தள்ள சித்தப்பா சதி வேலைகளை செய்ய தொடங்கியுள்ளார். இது மட்டுமின்றி மணி துரை தான் பாரதி கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்று அதற்கான சதிகளை செய்ய தொடங்கியுள்ளார்.
இதையெல்லாம் மீறி ஆதி, பாரதி கல்யாணம் எப்படி நடக்க போகிறது? ஆதி சதிகளை தாண்டி பாரதியை எப்படி கரம் பிடிக்க போகிறான் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜீ பிரபலங்கள் பங்கேற்க ஆதி பாரதியின் திருமண வைபோகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
ஆம், வரும் மே 19-ம் தேதி மதியம் 1.30 மணி முதல் 4 மணி வரை ஆதி, பாரதியின் திருமண வைபோகம் எபிசோட் 4 மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு நாளா இதுக்கு தான் வைட் பண்ணிட்டு இருந்தோம் என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஆதி, பாரதி திருமணத்திற்கு பிறகு புதிய அத்தியாயத்தில் இதயம் சீரியல் கதை பயணிக்க தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னட திரையுலகில் அறிமுகமாகி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே கவனம் பெற்றுவரும் நடிகை ஆஷிகா ரங்கநாத், ‘சர்தார் 2’…
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் இன்று (செப்.10) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள்…
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ‘சரிகம’ நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.…
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சர்தார் 2’. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக…
ராமநாதபுரத்தில் காலம் காலமாக கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் பாரம்பரியமான பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள…
Higher Promo Song | An Ordinary Man | Ravi Mohan | Yogi Babu | Keneeshaa…