Categories: Movie Reviews

100 % காதல் திரை விமர்சனம்

நடிப்பு – ஜி.வி.பிரகாஷ்குமார், ஷாலினி பான்டே தலைவாசல் விஜய், ஆர் வி உதயகுமார், அப்புகுட்டி மற்றும் பலர்

தயாரிப்பு – கிரியேட்டிவ் சினிமாஸ் என்ஒய், என்ஜே என்டர்டெயின்மென்ட்

இயக்கம் – சந்திரமவுலி

இசை – ஜி.வி.பிரகாஷ்குமார்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

வெளியான தேதி – 4 அக்டோபர் 2019

ரேட்டிங் – 1.75/5

தமிழ் திரைப்பட உலகில் காதல் படங்கள் கரை ஒதுங்கி சில பல வருடங்கள் ஆகிவிட்டது. வழக்கமான காதல் கதைகளைப் பார்க்க ரசிகர்கள் தயாராக இல்லை. முற்றிலும் வித்தியாசமான காதல் படங்களை வேண்டுமானால் ஓரளவிற்கு ரசிக்கிறார்கள். ரசிகர்கள்

காதலிக்கவே செய்யாத காதலர்கள் உள்ள இந்தப் படத்தின் பெயர் 100 % காதல். எதற்கு இப்படி ஒரு தலைப்பைத் எப்படி தேர்வு செய்தார்கள் என்பதுதான் தெரியவில்லை. படத்தின் கதாநாயகன், ஜி.வி.பிரகாஷ்குமார், கதாநாயகி ஷாலினி பாண்டேவின்
காதலைவிட படத்தின் கிளைமாக்சில் வரும் 30 வருடங்களாகப் பிரிந்திருந்த அவர்களின் தாத்தா, பாட்டியின் தங்கள் உண்மைக் காதலை உணர்ந்து ஒன்று சேர்ந்ததற்காக அப்படி ஒரு தலைப்பு வைத்திருக்க வேண்டும். என நினைக்கிறோம்

2011 ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம்தான் இந்த 100% லவ் என்ற படத்தின் ரீமேக்தான் இந்தப் திரைப்படம். கடந்த எட்டு வருடங்களில் காதலும் மாறியிருக்கும், காதல் படங்களின் ரசனையும் மாறியிருக்கும் என்பதை இப்படத்தின் இயக்குனர் சந்திரமவுலிக்கு புரியவில்லையோ என்னவோ.

ஜி.வி.பிரகாஷ்குமார்அவர் படிக்கும் படிப்பில்தான் நான் எப்போதும் நம்பர் 1 இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கும் புத்திசாலியான மாணவர். எப்போது பார்த்தாலும் படிப்பு, படிப்பு என்றிருப்பவர். அவரது வீட்டிற்கு படிப்பதற்காக அவருடைய முறைப் பெண் கதாநாயகி ஷாலினி பாண்டே வருகிறார். இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். படிப்பில் தடுமாறும் ஷாலினிபாண்டேவிற்க்கு ஜிவி பிரகாஷ்குமார், கற்றுக் கொடுத்து அவரை நன்றாகப் படிக்க வைக்கிறார்.

ஒரு தேர்வில் ஷாலினிபாண்டே,ஜி.வி பிரகாஷைகுமாரை தோற்கடித்து முதலிடம் பிடிக்கிறார். அதன் பின் ஷாலினிபாண்டே மீது பிரகாஷுகுமாருக்கு வெறுப்பு வருகிறது. அடுத்த தேர்வில் வேறு ஒரு மாணவர் முதலிடம் பிடிக்கிறார். கடைசி தேர்வில் அந்த மாணவரைத் தோற்கடிக்க ஷாலினிபாண்டே, ஜி வி.பிரகாஷ்குமார் இருவரும் ஒரு திட்டம் போடுகிறார்கள். ஷாலினிபாண்டே அந்த மாணவரைக் காதலிப்பதாக நாடகமாடி அவரைத் தோற்கடிக்கிறார்கள். ஜி.விபிரகாஷ்குமார் முதல் மாணவராய் தேர்ச்சி பெறுகிறார். அதன்பின் நடக்கும் பார்ட்டியில் பிரகாஷ் குமாருக்கு ஷாலினி பாண்டேவுக்கும் சண்டை போட்டு பிரிந்து சென்று விடுகிறார்கள் இருவரது குடும்பமும் அதிர்ச்சியாகிறது. பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் மீதிக் கதை.

தமிழில் நடிகர் விஜய், நடிகை ஜோதிகா நடித்து 2000ம் வருடத்தில் வெளிவந்த குஷி படத்தின் கதையே அப்படி, இப்படியுமாக கொஞ்சம் மாற்றி தான் தெலுங்கில் 100 % லவ் என சுட்டிருக்கிறார்கள்.

அதையே மீண்டும் ரீமேக் உரிமை வாங்கி 100% காதல் என இப்போது படமாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்கு நேரடியாக குஷி படத்தின் உரிமையை வாங்கி மீண்டும் படமாக்கியிருக்கலாம். அது இயக்குனருக்கு தெரியவில்லை

தெலுங்கில் கதாநாயகன், கதாநாயகி கதாபாத்திரங்களுக்கு என்ன பெயர் வைத்தார்களோ, அதே பெயர்களைத்தான் இந்த தமிழ் படத்திலும் வைத்திருக்கிறார்கள். அதைக் கொஞ்சம் கூட மாற்றி யோசிக்கவில்லை. இயக்குனர் அப்படியென்றால் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் அப்படியேதான் ரீமேக் செய்திருப்பார்கள் போலிருக்கிறது.

படிப்பில் படுகெட்டியாக இருக்கும் மாணவன் பாலுமகேந்திரா கதாபாத்திரம் ஜி.வி.பிரகாஷ்குமாருக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. நம்பர் 1 ஆகவே இருக்க வேண்டும் என்ற திமிர்த்தனத்தை நன்றாகவே வெளிப்படுத்துகிறார்.
ஜி.வி பிரகாஷ்குமார் அதே சமயம், ஷாலினிபாண்டே மீது லேசான காதல் எட்டிப் பார்க்கும் மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்த சிரமப்படுகிறார். கதாநாயகன்

ஷாலினி பாண்டே இந்தப் படத்தில் நடிப்பை வெளிப்படுத்தியதை விட இடுப்பை மட்டும் வெளிப்படுத்திய காட்சிகள்தான் அதிகம். இதை ஒன்றை வைத்தே இந்த தெலுங்கு ரீமேக் படத்தின் கதையை குஷி படத்திலிருந்து சுட்டிருப்பார்கள் என நம்பலாம். இருந்தாலும் ஜி.வி.பிரகாஷ்குமாருடன் ஏட்டிக்குப் போட்டியாக நடிக்கும் காட்சிகளில் அவரை விட இவர் முந்துகிறார்.

படத்தில் ஒரு நகைச்சுவைக் கதாபாத்திரத்தைச் சேர்த்திருந்தாலாவது இந்த படம் நன்றாக இருந்திருக்கும். அப்படி எதுவும் இல்லை. திரும்பத் திரும்ப ஜி.வி. பிரகாஷ் குமார் ஷாலினிபாண்டே காட்சிகளே அதிகம் இடம் பெறுகிறது. நகைச்சுவை என்ற பெயரில் பின்னர் அமெரிக்க ரிட்டர்ன் மாமாவாக வரும் தம்பி ராமையா படம் பார்க்கும் ரசிகர்களை பொறுமையை நிறையவே சோதித்து இருக்கிறார்.

நடிகர் நாசர், நடிகை ஜெயசித்ரா, தலைவாசல் விஜய், ரேகா, ஆர்.வி.உதயகுமார், அப்புக்குட்டி தேவையான நேரங்களில் தலைகாட்டி விட்டு போகிறார்கள். அனைவரது நடிப்பையும் பார்க்கும் போது ஏதோ ஒரு டிராமாவைப் பார்ப்பது போலவே உள்ளது. டிவி சீரியல் போலவும் உள்ளது
பிரகாஷ் குமார் வீட்டில் ஐந்தாறு குழந்தைகள் அங்கேயே தங்கி, சாப்பிட்டு, படித்து, வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். எந்த பெற்றோர் இப்படி விட்டு வைப்பார்கள் எனத் தெரியவில்லை.

இந்த மாதிரியான படங்களுக்கு பாடல்கள் ஹிட்டாவது முக்கியம். அதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் கவனம் செலுத்தவில்லை. அவர் நடிக்கும் படங்களை அவராவது பாடல்களில் ஹிட்டாக்க முயற்சிக்கலாம். ஏனோ மறந்து விட்டார்

ஒரு வீட்டுக்குள்யே நடக்கும் நாடகம் போலத்தான் படம் முழுவதும் நகர்கிறது. கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் இடையிலான ஈகோதான் படத்தின் மையம். ஆனால், அதைச் சரியாக வெளிப்படுத்ததால் படம் முழுவதுமே தள்ளாடுகிறது. இடைவேளைக்குப் பின் கதை எங்கெங்கோ நகர்ந்து எப்படியோ வந்து முடிகிறது.

100% காதல் – 25 % காதல் மட்டுமேதான் உள்ளது

admin

Recent Posts

Jai Jai Ram Song

Jai Jai Ram Song | Ramayana | Namit M, Nitesh T | Ranbir, Yash |…

13 hours ago

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

2 days ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

2 days ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

2 days ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

2 days ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

2 days ago