vijay sethupathi in master
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. படம், தமிழ் புத்தாண்டு அன்று வெளிவர இருக்கிறது. இம்மாதம் இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அதன்பிறகு படத்தொகுப்பு, குரல் சேர்ப்பு, பின்னணி இசை சேர்ப்பு ஆகிய வேலைகள் நடைபெற இருக்கிறது. இந்த படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். ‘‘கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் நடிக்கிறீர்களே…?’’ என்று விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘‘இமேஜ் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இந்த வில்லன் வேடம் பிடித்து இருக்கிறது. அதனால் நடிக்கிறேன்’’ என்று பதில் அளித்தார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…