Categories: NewsTamil News

ரஜினியும் கிடையாது, கமலும் கிடையாது! லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா.. இதோ..

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் எனும் மாபெரும் படைப்பை உருவாக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

ஏப்ரல் மாதம் வெளிவர காத்திருந்த தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கொரானா தாக்கம் காரணமாக தள்ளிப்போய் இருக்கிறது. ஆனால் கூடிய விரைவில் கொரானா தாக்கம் முழுமையாக குறைந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு மாஸ்டர் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல் ஹாசனின், ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்க போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

மேலும் அரசியல் கட்ட பணிகள் இருப்பதால் இப்படத்தின் நடிப்பில் இருந்து விலகி ரஜினியை மட்டும் வைத்து படத்தை தயாரிக்க முடிவு செய்தார் நடிகர் கமல் ஹாசன்.

ஆனால் இப்படத்தை குறித்து பல விதமான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. ஆம் இப்படத்தில் நடிக்க ரஜினி ரு 100 கோடி சம்பளம் கேட்டதால் இப்படத்தை கமல் ஹாசன் கைவிட்டு விட்டார் என பல விதமான சர்ச்சைகள் எழுந்தன.

மேலும் இதுவரை இப்படத்தை குறித்து கமல் ஹாசனிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் சரியா துவங்கியுள்ளது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க போகிறாராம். மேலும் இப்படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எடுக்க போகிறாராம் லோகேஷ் கனகராஜ்.

மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Suresh

Recent Posts

சூர்யா 46 : மமிதா பைஜூ சொன்ன லேட்டஸ்ட் தகவல்..!

சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

6 hours ago

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்!

முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…

6 hours ago

இளையராஜாவுக்கு இடைக்கால தடை.. ஐகோர்ட் கொடுத்த உத்தரவு..!

இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…

6 hours ago

அஜித் 64 : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அப்டேட்..!

அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

6 hours ago

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

8 hours ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

12 hours ago