மாற்றுத்திறனாளி தம்பதியை நெகிழ வைத்த விஜய்

தனியார் டிவி விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்பாக முன்னணி நடிகர்களின் ரசிகர்களை வைத்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் தம்பதியான குமார் – கீதா இருவரும் கலந்து கொண்டனர்.

இதில் குமார் பேசும் போது, “அண்ணா.. உங்களைப் பார்க்க வேண்டும் என 20 ஆண்டுகளாக பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். அனைத்திலுமே எனக்குத் தோல்விகள்தான் வந்துள்ளது. நான் சாகிறதுக்குள்ள ஒரே ஒரு முறை உங்களைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் அண்ணா. நீங்கள் நல்லாயிருக்கணும், 100 ஆண்டுகள் நல்லாயிருக்கணும். 1000 வருஷம் நல்லாயிருக்கணும். அண்ணி, குழந்தைகளுடன் சந்தோஷமா இருக்கணும். எங்களுக்கு நிறைய படம் கொடுக்கணும். நிறைய பெயர், புகழ் எல்லாம் சம்பாதிக்கணும். அதாவது உங்களுக்கு முன்பாகவே நாங்கள் இருவரும் செத்துப் போய்விட வேண்டும். நீங்கள் இல்லாத ஒரு உலகத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை” என்று பேசினார்.

இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலருமே இவர்களை விஜய் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், இருவரையும் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பேசினார் விஜய்.

நீங்கள் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்ற வார்த்தைகள் எல்லாம் என்னை ரொம்பவே நெகிழ வைத்துவிட்டது என விஜய் கூறினார். உங்களுடன் நடிக்க வேண்டும் என்று குமார் கேட்க, கண்டிப்பாக பண்ணலாம் என்று கூறியுள்ளார் விஜய்.

Suresh

Recent Posts

இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என கேட்ட விஜய் சேதுபதி.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

1 hour ago

விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

4 hours ago

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…

6 hours ago

விஜய் சேதுபதியின் பேச்சு.. வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

6 hours ago

🪔 கொங்குநாடு தீபாவளி திருவிழா 2025 🪔

அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…

21 hours ago

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட பதிவு..அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…

1 day ago