பேஸ்புக்கை முடக்கி கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றிய ஹேக்கர்கள் – நடிகை போலீசில் புகார்

பிரபல நடிகைகளின் டுவிட்டர், முகநூல் பக்கங்களை சிலர் ஹேக் செய்து முடக்கும் விஷமத்தனங்கள் தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் நடிகை குஷ்புவின் டுவிட்டரை ஹேக் செய்தனர்.

இந்த நிலையில் பிரபல நடிகை அனுபமா பரமேஸ்வரன் முகநூல் பக்கத்தையும் தற்போது முடக்கி உள்ளனர். இவர் மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடிய ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.

முகநூல் பக்கத்தில் தனது புகைப்படங்கள், நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் மற்றும் சமூக விஷயங்களை அனுபமா அடிக்கடி பகிர்ந்து வந்தார். ரசிகர்களுடனும் கலந்துரையாடினார். இந்த நிலையில் அனுபமா முகநூல் பக்கத்தையும் தற்போது ஹேக் செய்து அதில் கவர்ச்சியான பெண்ணின் உடலோடு அவரது தலையை ஒட்டி மார்பிங் செய்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர்.

இதை பார்த்த அனுபமா அதிர்ச்சியாகி, “இது மார்பிங் போட்டோ யாரும் நம்ப வேண்டாம். எனது புகைப்படத்தை இப்படி மார்பிங் செய்துள்ளீர்களே உங்களுக்கு அறிவு இல்லையா? உங்களுக்கு சகோதரியும், அம்மாவும் இல்லையா? இதுபோன்ற செயல்களுக்கு அறிவை பயன்படுத்துவதை விட்டுவிட்டு நல்ல காரியங்களுக்கு அறிவை பயன்படுத்துங்கள்” என்று கோபமாக சாடி உள்ளார். இந்த மார்பிங் புகைப்படத்தை யாரும் பகிர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.

Suresh

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

1 day ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

1 day ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

1 day ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

1 day ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

1 day ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

1 day ago